என் மலர்tooltip icon

    செய்திகள்

    அச்சிறுப்பாக்கத்தில் டிரைவரை தாக்கி கார்களை கடத்தும் கும்பல் கைது
    X

    அச்சிறுப்பாக்கத்தில் டிரைவரை தாக்கி கார்களை கடத்தும் கும்பல் கைது

    அச்சிறுப்பாக்கத்தில் டிரைவரை தாக்கி கார்களை கடத்தும் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுபாக்கம் மழை மலை மாதா ஆலயம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஒரு காரின் நம்பர் அழிக்கப்பட்டு இருந்தது. காரில் இருந்த டிரைவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல் கூறினார். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் புதுச்சேரி மாநிலம், லாசுபேட்டை சேர்ந்த குணசேகரன் என்பதும் வாடகைக்கு கார் எடுத்து டிரைவரை தாக்கி காரிலிருந்து வெளியே தள்ளி காரை கடத்துவோம் என்று கூறினார்.

    புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம் பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், குமார், ஜோசப் ஆகியோருடன் இணைந்து கார்களை கடத்தி விற்போம் எனக் கூறினார்.

    குணசேகரன் கூறிய தகவலின் அடிப்படையில் அச்சிறுபாக்கம் போலீஸார் விழுப்புரம் மாவட்டம், வானூரில் உள்ள அவரது வீட்டில் இருந்த மினி லாரியும் கைபற்றி பறிமுதல் செய்து, சுரேஷ் மற்றும் குமார் கைது செய்தனர்.மற்றொரு குற்றவாளி ஜோசப் புதுச்சேரி மாநிலத்தில் வேறு ஒரு வழக்கில் சிறை உள்ளார். அச்சிறுபாக்கம் போலீஸ் வழக்கு பதிவு 3 பேரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×