என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை ஆமை
    X

    வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை ஆமை

    வேதாரண்யம் கடல் பகுதியில் ஆலிவர் ரெட்லி ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கின.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் அரியவகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி வகை ஆமைகள் கடற்கரை மணல் பகுதிக்கு வந்து குழிதோண்டி முட்டையிட்டு பின்பு அதை மூடிவிட்டு கடலுக்கு சென்றுவிடும். அந்த முட்டைகள் இயற்கையாக குஞ்சு பொரித்து தானாகவே கடலுக்குள் சென்றுவிடும்.

    இந்த ஆமை முட்டைகளை சிலர் திருடி உணவிற்காக எடுத்துச் சென்று விடுவார்கள். இதை தடுக்க வனத்துறையினர் ஆங்காங்கே ஆட்களை நியமித்து ஆமை முட்டைகளை சேகரித்து ஆறுகாட்டுத் துறை, கோடியக்கரை ஆமை முட்டைகள் பொரிப்பகம் அமைத்து குஞ்சுகளை பொரிக்க வைத்து அதை கடலில் விடுவது வழக்கம்.

    பருவ கால மாற்றம், கடல் நீரோட்டம், படகு மற்றும் கப்பல்களில் அடிபட்டு இந்த அரியவகை ஆமைகள் அவ்வப்போது வேதாரண்யம் கடற்பகுதியில் இறந்து கரை ஒதுங்குவது வழக்கம்.

    தற்போது ஆலிவர் ரெட்லி ஆமை ஒன்று வேதாரண்யம் கடல் பகுதியில் இறந்து கரை ஓதுங்கியது. இதை அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர் வந்து இறந்த ஆமையை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    இந்த ஆமை படகில் அடிபட்டு இறந்ததா? அல்லது வேறெதும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×