என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
    X

    திருப்போரூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

    திருப்போரூர் அருகே உறவினர் வீட்டுக்கு சென்றபோது மாயமான சிறுவன் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த மானாம்பதி ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரித்தீஷ் (வயது 6). ராஜா குடும்பத்துடன் நேற்று சிறுதாவூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று இருந்தார்.

    அங்கு வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரித்தீஷ் திடீரென்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருப்போரூர் போலீசில் புகார் செய்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்தில் சிறுவன் ரித்தீஷ் பிணமாக மிதந்தான். விளையாடிய போது குளத்தில் தவறி விழுந்து சிறுவன் இறந்துள்ளான்.

    Next Story
    ×