என் மலர்

  செய்திகள்

  கோவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில குழு கூட்டம் தொடங்கியது
  X

  கோவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில குழு கூட்டம் தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.கே. நகர் தேர்தல் குறித்து கோவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
  கோவை:

  சென்னை ஆர்.கே. நகரில் அடுத்த மாதம் 21-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

  ஆர்.கே. நகர் தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டிடுவதா? வேண்டாமா? யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கோவையில் இன்று நடைபெறும் மாநில குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

  அதன்படி இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள ஆர்.வி. ஓட்டலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாநில குழு கூட்டம் காலை தொடங்கியது.

  செயற்குழு கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தர் ராஜன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் ரெங்கராஜன் எம்.பி., சம்பத், பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  முதலில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. கூட்டத்தில் ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? போட்டியிடுவது என்றால் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

  பின்னர் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இதில் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் ஆர்.கே. நகர் தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் நிலைபாடு குறித்து அறிவிக்கப்படுகிறது.
  Next Story
  ×