என் மலர்
செய்திகள்

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி அணையின் மதகு உடைந்தது - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்றில் உள்ள கே.ஆர்.பி அணையில் மதகு உடைந்து அதிகளவிலான நீர் வெளியேறி வருவதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையின் மதகில் உள்ள இரும்பு கதவு இன்று மாலை திடீரென உடைந்தது. இதனால், அணையில் உள்ள நீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. 51 அடி தண்ணீர் அணையில் இருப்பதால் நீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதகின் கதவு துருபிடித்து இருந்ததாகவும், பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அதை மாற்றவில்லை எனவும் அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர்.

Next Story