என் மலர்
செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று மதியம் ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்துள்ளது. இன்று காலையும் கடலூர் நகரில் மழை பெய்தது. மேலும் கடல் பகுதியான தாழங்குடா, பரங்கிப்பேட்டை, தேவனாம்பட்டினம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றமும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனையொட்டி கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று மதியம் ஏற்றப்பட்டுள்ளது.
Next Story






