என் மலர்
செய்திகள்

நடுக்கடலில் மீன்பிடித்த 10 நாகை மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை
பருத்தித்துறை பகுதியில் மீன்பிடித்த 10 நாகை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்று ஜெயிலில் அடைத்தனர்.
நாகை:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். இதையொட்டி இங்கு ஏராளமான மீன்கள் கிடைக்கும் என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து 1500 மீனவர்கள் அங்கு முகாமிட்டு மீன்பிடித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை நிலவியது. தற்போது மழை நின்று விட்டதால் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த அமிர்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இலங்கை அருகே உள்ள பருத்தித்துறை பகுதியில் இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் படகை முற்றுகையிட்டு அதில் மீன்பிடித்து கொண்டிருந்த 10 மீனவர்களையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்று ஜெயிலில் அடைத்தனர்.
இதுபற்றி நாகை மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அக்கரைபேட்டை மீனவ பஞ்சாயத்தார் கடலோர காவல் படை போலீசிடம் இதுதொடர்பாக புகார் செய்து அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக மீனவர்கள் கூறும் போது, ‘இலங்கை கடற்படையினர் தமிழக கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தாலும் மீனவர்களை கைது செய்வது தாக்குவது தடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் மீனவர்களை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையும் பலன் அளிக்கவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் போக்கை இலங்கை கடற்படை கைவிட மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும்’’ என்றனர்.

Next Story