என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்புவனம் அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி
    X

    திருப்புவனம் அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி

    திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மின் வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருப்புவனம்:

    திருப்புவனம் அருகே மடப்புரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் மேலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு இவர் திருப்புவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது வைகை ஆற்று பாலத்தை அடுத்த வளைவு பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜாங்கம் சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×