என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மகேந்திரமங்கலம் அருகே கிணற்றில் மூதாட்டி பிணம்
By
மாலை மலர்19 Oct 2017 1:24 PM GMT (Updated: 19 Oct 2017 1:25 PM GMT)

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியின் பிணம் கிணற்றில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜெக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மேகலா (வயது 75). மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
கடந்த 8-ந்தேதி மேகலா வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பின்னர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சித்துராஜ் என்பவருடைய தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் மேகலா பிணமாக மிதந்தார்.
பின்னர் போலீசார், கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×