என் மலர்
செய்திகள்

சிறையில் வாடும் 42 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை சம்மதம்
ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 42 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 42 மீனவர்கள் கடந்த 2 மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களை விடுவிக்கும்படி இலங்கை அரசுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து இருந்தது.
அதை ஏற்று 42 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளிபண்டிகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைக்கான உத்தரவு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என தெரிகிறது.
Next Story






