என் மலர்
செய்திகள்

புழல் மகளிர் சிறையில் சோதனை செல்போன்-கத்தி பறிமுதல்
புழல் மகளிர் சிறையில் அதிரடி சோதனையில் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் , சார்ஜர், கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
புழல்:
புழல் சிறையில் மளிர் ஜெயில் உள்ளது. இங்கு 140 பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மாதவரம் துணை கமிஷனர் கலைசெல்வன், மத்திய குற்ற புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரி மற்றும் 25-ஆயுதப்படை பெண் போலீசார் புழல் மகளிர் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் , சார்ஜர், கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குபதிவு செய்து செல்போன், கத்தி ஆகியவை எப்படி கிடைத்தது என்று விசாரித்து வருகிறார்கள்.
Next Story