என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் எம்.ஜி.ஆர். ஓவியம் - புகைப்பட கண்காட்சி: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
    X

    கடலூரில் எம்.ஜி.ஆர். ஓவியம் - புகைப்பட கண்காட்சி: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

    கடலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து காலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

    இதனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    பின்னர் எம்.ஜி.ஆர். உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த கண்காட்சியில் பென்சில், ஸ்டோக், லைன் போன்றவற்றை பயன்படுத்தி எம்.ஜி.ஆர். வாழ்க்கை 15 வயது முதல் அவரது இறுதி நாட்கள் வரை உள்ள படங்களை கடந்த 10 நாட்களில் 100 ஓவியங்களை ஓவியர் ஜெ.ஜெ தலைமையில் வரைந்தனர்.

    மேலும் எம்.ஜி.ஆர். சொந்த வாழ்க்கை, திரைப்படத் துறை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, பொது வாழ்க்கை குறித்து தத்ரூபமாக ஓவியம் வரைந்து இருந்தனர். இந்த கண்காட்சியில் எம்.ஜி.ஆர். குறித்து புகைப்படம் இருந்தது. இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட எம்.பி.க்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
    Next Story
    ×