என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்: டிரைவர் தப்பி ஓட்டம்
    X

    காட்டுமன்னார்கோவில் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்: டிரைவர் தப்பி ஓட்டம்

    காட்டுமன்னார்கோவில் அருகே மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாப்புலியூர் கொள்ளிடம் ஆற்றங் கரையில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையொட்டி இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையிலான போலீசார் நள்ளிரவில் ஓமாப்புலியூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மணல் கடத்தி கொண்டு டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் டிராக்டரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். போலீசார் அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் டிராக்டரில் மணல் கடத்தி வந்தவர் குணவாசல் கிராமத்தை சேர்ந்த தமிழ்சேகரன் (வயது 33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×