என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை முதல் சினிமா டிக்கெட் விலை உடன் ஜி.எஸ்.டி. வரி கூடுதலாக வசூல்
    X

    நாளை முதல் சினிமா டிக்கெட் விலை உடன் ஜி.எஸ்.டி. வரி கூடுதலாக வசூல்

    திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நாளை முதல் தியேட்டர்களில் ஏற்கனவே இருந்த டிக்கெட் விலை உடன் ஜி.எஸ்.டி. வரி கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.
    சென்னை:

    ஜி.எஸ்.டி வரி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியை கண்டித்து கடந்த நான்கு நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக அரசுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில், போராட்டம் வாபஸ் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், தியேட்டர்கள் நாளை முதல் இயங்கும். நாங்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவில்லை, மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியுடன் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறினார். 

    ஜி.எஸ்.டி வரி விதிப்படி, 100 ரூபாய்க்கு கீழ் உள்ள டிக்கெட்டுக்கு 18 சதவீதம் வரியும், 100 ரூபாய்க்கு மேல் உள்ள டிக்கெட்டுக்கு 28 சதவீதம் விதிக்கப்படும். 

    இந்நிலையில், நாளை முதல் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலை உயர உள்ளது. 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட டிக்கெட்டின் விலை 94 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், ரூ.120க்கு விற்கப்பட்ட டிக்கெட்டின் புதிய விலை ரூ.153-க்கு விற்கப்படும் என்று தெரிகிறது.

    கடந்த வாரம் ரிலீஸ் ஆன  திரைப்படங்கள் நாளை மீண்டும் ரிலீஸ் ஆகிறது. நாளை வெளியாக இருந்த படங்கள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுள்ளது. இன்றிரவு 12 மணி முதல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கவுள்ளது.
    Next Story
    ×