என் மலர்

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் வாலிபர் பலி
    X

    ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் வாலிபர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆண்டிப்பட்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும் பாறை அருகே உள்ள தும்மக்குண்டு தந்தியன்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் கனியரசன் (வயது 25). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடமலைக்குண்டு - வருசநாடு ரோட்டில் வந்து கொண்டு இருந்தார். அப்போது சாலை ஓரம் நடந்து சென்ற முனியம்மாள் என்பவர் மீது மோதி தானும் தவறி கீழே விழுந்தார்.

    இதில் காயமடைந்த இருவரும் ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் கனியரசன் வழியிலேயே உயிரிழந்தார். முனியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×