என் மலர்
செய்திகள்

பெருந்துறையில் ரூ.1½ கோடிக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராவாரம் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொப்பரைத்தேங்காய் ஏலம் நடைபெறும். இந்த வாரத்தில் ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
பெருந்துறை:
பெருந்துறை ஈரோடு ரோடு பகுதியில் உள்ள பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராவாரம் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொப்பரைத்தேங்காய் ஏலம் நடைபெறும்.
இதில் திருப்பூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது கொப்பரைத்தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் 3 ஆயிரத்து 873 மூட்டைகளில் 1 லட்சத்து 90 ஆயிரம் கிலோ அளவுள்ள கொப்பரைத்தேங்காய்கள் ஏலத்திற்கு வந்திருந்தன.
இதில் முதல் தர கொப்பரைத்தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ 82.35 முதல் ரூ 85.60 வரையிலும், இரண்டாம் தர தேங்காய் ரூ 48.10 முதல் ரூ 79.80 வரையிலும் ஏலம் போனது. மொத்தமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. கடந்த வாரத்தை விட 38ஆயிரம் கிலோ தேங்காய்கள் அதிகமாக வரத்தும், விற்பனை விலை 2 ரூபாயும் அதிகமாகவும் இருந்தது.

Next Story