search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா
    X

    உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா

    உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் ஒன்பது கண்காணிப்பு கேமராக்களும், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்டவை உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூரில் பல கொள்ளை சம்பவங்கள் சில நாட்களுக்கு முன்பு நடந்து வந்தது. இதையொட்டி உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் 9 கண்காணிப்பு கேமராக்களும், டிஜிட்டல் கடிகாரமும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசக பலகைகளும் உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கேமராக்களின் உதவியால் கடந்த சில நாட்களில் 2 திருட்டு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×