என் மலர்
உள்ளூர் செய்திகள்

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் செல்ல 20 புறநகர் ரெயில் நிலையங்களில் லிப்ட் வசதி
- புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் முழு வீச்சில் பணிகள் நடந்து வருகின்றன.
- மூத்த குடிமக்கள் பிளாட்பாரங்களுக்கு எளிதாக செல்ல வசதியாக லிப்ட் வசதி செய்யப்படுகிறது.
சென்னை புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு அடிப்படையான வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் தங்கள் உடமைகளுடன் நடை மேம்பாலத்தை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள்.
அவர்கள் எளிதாக பிளாட்பாரங்களுக்கு செல்ல வசதியாக லிப்ட் வசதி செய்யப்படுகிறது. அரக்கோணம், வில்லிவாக்கம், பேசின்பாலம், வியாசர்பாடி, ஆவடி, கொரட்டூர், வண்ணாரப் பேட்டை, கொருக்குப் பேட்டை உள்ளிட்ட 20 ரெயில் நிலையங்களில் லிப்ட் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் முழு வீச்சில் இப்பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஏழுமலை கூறியதாவது:-
புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. ரெயில் நிலையங்கள் தூய்மைப் பணி, குடிநீர், கழிப்பிடம் மற்றும் லிப்ட் வசதி போன்றவை படிப்படியாக மேம்படுத்தப் படுகின்றன. இந்த பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும். மூத்த குடிமக்கள் பிளாட்பாரங்களுக்கு எளிதாக செல்ல வசதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






