என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் சாவு
    X

    மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் இருந்த தோப்புக்குள் புகுந்து தேக்கு மரத்தில் மோதியது.
    • தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த அவினாஷ், கணேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த புளியம்பேட்டை ஒத்ததெருவை சேர்ந்தவர் மோகன்.

    இவரது மகன் அவினாஷ் (வயது 26). செட்டிமண்டபம் வடக்கு தெருவை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் கணேஷ் (23).

    நண்பர்களான இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருநீலக்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி அந்தமங்கலம் வழியாக சென்றனர். அப்போது அந்தமங்க லத்தில் சாலை வளைவில் திரும்பியபோது, தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் இருந்த தோப்புக்குள் புகுந்து தேக்கு மரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவினாஷ், கணேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் 2 பேர் பிணமாக கிடப்பதை கண்டு திருநீலக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்ே்பரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×