என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பூரில் 20 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
    X

    பெரம்பூரில் 20 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பூர் லோகோ ரெயில் நிலையம் அருகில் பெரவள்ளூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் இன்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • அர்ஜுன் தாசை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    பெரம்பூர் லோகோ ரெயில் நிலையம் அருகில் பெரவள்ளூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் இன்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். ஒரிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் பீர், மன்வீர் பீர் என்பதும் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அம்பத்தூர் மண்ணூர் பேட்டை பகுதியை சேர்ந்த அர்ஜுன் தாஸ் என்பவர் அவர்களுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பி கஞ்சாவை எடுத்து வர சொன்னது தெரியவந்தது. இதனையடுத்து அர்ஜுன் தாசையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    சென்னை கே.கே. நகர் ராணி அண்ணா நகரில் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒருகிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×