என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
  X

  2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆனந்தாயி மனநிலை பாதிக்கப்பட்ட தனது மகனுடன் மனு கொடுக்க வந்தார்
  • மண்எண்ணைய் எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர்.

  சேலம்:

  சேலம் வேடுகத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இலம்பக்கவுண்டர். இவரது மனைவி ஆனந்தாயி. இவர் இன்று காலை மனநிலை பாதிக்கப்பட்ட தனது மகனுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது, பையில் பாட்டியில் வைத்திருந்த மண்எண்ணைய் எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர்.

  இதை பார்த்த பாதுகாப்பு நின்ற போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்தாயி கூறுகையில், எங்களுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கொண்டு மிரட்டி வருகின்றனர். எனவே எங்களுக்கு வாழ வழி இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்தார்.இதேபோல் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக மண்எண்ணையை எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×