என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி  2 பெண்கள் படுகாயம்
    X

    படுகாயமடைந்த பெண்ணை படத்தில் காணலாம்.

    கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி 2 பெண்கள் படுகாயம்

    • கொடைக்கானல் கீழ்பூமி பகுதியில் உலாவந்த காட்டெருமைகள் அப்பகுதியை சேர்ந்த முத்துமாரி, முத்துலட்சுமி ஆகிய 2 பேரையும் கடுமையாக தாக்கியது.
    • வனவிலங்குகள் இடம்பெயர்ந்து உயிரிழப்பு மற்றும் சேதம் ஏற்படுத்தி வருவதை வனத்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி நகர்பகுதிக்குள் இடம்பெயர்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் இடம்பெயர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி மிரட்டி வருகின்றன. கொடைக்கானல் கீழ்பூமி பகுதியில் உலாவந்த காட்டெருமைகள் அப்பகுதியை சேர்ந்த முத்துமாரி, முத்துலட்சுமி ஆகிய 2 பேரையும் கடுமையாக தாக்கியது.

    உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காட்டெருமைகளை போராடி மீட்டனர். இதனைதொடர்ந்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு கொடைக்கானல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதனிடையே செல்லாயிபுரம் பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று வீடுகள் முன்பு கட்டியிருந்த வாத்துகளை பிடித்துச்செல்லும் சிசிடிவி காமிரா காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் 3 வாத்துகள் உயிரிழந்தன. தொடர்ந்து வனவிலங்குகள் இடம்பெயர்ந்து உயிரிழப்பு மற்றும் சேதம் ஏற்படுத்தி வருவதை வனத்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×