என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிறையில் அடைப்பு
- சந்தேகபடும்படியாக வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
- 27 மூட்டைகளில் 1350 கிலோ ரேசன் அரிசி இருந்தது.
தருமபுரி,
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, உத்திரவுப்படி, சேலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், மேற்பார்வையில் தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் வேணுகோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் மேற்கொண்ட வாகனச்சோதனையில் தருமபுரி - பாலக்கோடு நெடுஞ்சாலையில், புலிகரை அருகே சந்தேகபடும்படியாக வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 27 மூட்டைகளில் 1350 கிலோ ரேசன் அரிசி இருந்தது.இந்த கடத்தலில் ஈடுபட்ட தருமபுரி மாவட்டம் மாட்டியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன்முத்து (வயது 38) மற்றும் கொளகத்தூரைச் சேர்ந்த கணேசன் மகன் வினுமான் (34) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றகாவலில் தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.
கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தருமபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.