என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி அருகே ரேசன்கடையில் முறைகேடு;  2 பேர் சஸ்பெண்டு
    X

    கோப்பு படம்

    ஆண்டிபட்டி அருகே ரேசன்கடையில் முறைகேடு; 2 பேர் சஸ்பெண்டு

    • கலெக்டர் ஷஜீவனா ஆண்டிபட்டி அருகே அம்மாச்சியாபுரம் ரேசன்கடையின் செய ல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ரேசன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆண்டிபட்டி அருகே அம்மாச்சியாபுரம் ரேசன்கடையின் செய ல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அம்மாச்சியா புரம் ரேசன்கடையில் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு வழங்கப்படும் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியினை தரையில் கொட்டி வினியோகம் செய்தது கண்டறியப்பட்டது.

    சர்க்கரை எடை அளவினை மாவட்ட கலெக்டர் சரிபார்த்த போது 300 கிராம் எடை அளவு குறைவாக காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து துறை சார்ந்த அலுவலர்கள் ரேசன்கடையினை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட அறிவுறுத்தி னார்.

    அதன் அடிப்படையில் துறை சார்ந்த அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொ ண்டனர். அப்போது புழுங்கல் அரிசி 10,237 கிலோவும், பச்சரிசி 525 கிலோவும், சர்க்கரை 345.5 கிலோவும் இருப்பு குறை வாக இருந்தது கண்டறி யப்பட்டது.

    இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தர வின்படி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் அம்மாச்சியாபுரம் ரேசன்கடையின் விற்பனை யாளர் சுப்பிரமணி மற்றும் கட்டுநர் ஈஸ்வரன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×