என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கம்பத்தில் வாலிபரை மிரட்டி செல்போன் பறித்த 2 பேர் கைது

- வாலிபரை மிரட்டி செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் செக்கடி தெருவை சேர்ந்தவர் முகமதுராஜித்(23). இவர் புதுபஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெட்ரோல் காலியாகிவிட்டது. அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் முகமதுராஜித்தை மிரட்டி அவரை தாக்கி விலைஉயர்ந்த செல்போன், வெள்ளி மோதிரம், செயினை பறித்துச்சென்றனர்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளையும், செல்போன் சிக்னலையும் வைத்து விசாரணை நடத்தினர்.
இன்று காலை புதிய பஸ்நிலைய பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் முகமதுராஜித்திடம் செல்போன் பறித்து சென்ற குரங்குமாயன் தெருவை சேர்ந்த சிவனேசன்(21), செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரிஷி(25) என தெரியவந்தது.
போலீசார் 2 பேரையும் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.