என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கூடலூரில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை
- கூடலூர் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டார்
- உடல்நலக்குறைவால் தொழிலாளி தற்கொலை
கூடலூர்:
கம்பம் அருகே சுருளிபட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி(26). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்றுவலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா காலனியில் உள்ள அவரது தந்தை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடலூரை சேர்ந்தவர் அர்ச்சனா(20). இவருக்கும் ரவிக்குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரவிக்குமார் மது குடித்து வந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அர்ச்சனா கோவித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மீண்டும் மனைவியை ரவிக்குமார் அழைத்துச்சென்றார்.
அப்போது அர்ச்சனா வீட்டிலேேய தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 சம்பவங்கள் குறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






