என் மலர்
உள்ளூர் செய்திகள்

நில தகராறில் நடந்த மோதலில் 2 பேர் கைது
- அடிக்கடி நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
- 3 பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள இனாம் குட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கோடியப்பன் மகன் சிவக்குமார் (வயது 33). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சீனிவாசன் (23) என்பவருக்கும் அடிக்கடி நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் மற்றும் சீனிவாசன் என்பவருடையே நிலத்தில் ஜே.சி.பி. இயந்திரம் வைத்து பயிர்களை நாசம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
இதில் சிவகுமாரின் தம்பி சுரேஷ் மற்றும் சீனிவாசனின் தாயார் லட்சுமியம்மா இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப் பட்டுள்ளனர். பின்னர் இரு தரப்பினரும் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இரு தரப்பினரை சேர்ந்த சிவக்குமார் மற்றும் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இரு தரப்பினரின் அடிதடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள 3 பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.






