என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டி காதல் தகராறில் மோதல்; பைக் தீ வைத்து எரிப்பு
  X

  ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டி காதல் தகராறில் மோதல்; பைக் தீ வைத்து எரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெண்ணை கருக்கால்வாடி கண்காணியூர் பகுதியை சேர்ந்த வாலிபர் பிரகாஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளார்.
  • ஒரே பெண்ணை இருவரும் காதலித்து வந்தது தெரியவந்து.

  தாரமங்கலம்:

  தாரமங்கலம் அழகுசமுத்திரம் கிராமம் பகுதியை சேர்ந்த வாலிபர் கோகுலக்கண்ணன் (வயது 25) இவர் கருக்கல்வாடியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதே பெண்ணை கருக்கால்வாடி கண்காணியூர் பகுதியை சேர்ந்த வாலிபர் பிரகாஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளார்.

  இதனால் ஒரே பெண்ணை இருவரும் காதலித்து வந்தது தெரியவந்து,இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரகாஷ் நண்பர்களான பாலமுருகன், முத்து, விஷ்வா, ரகு, ராகவன், மற்றும் 10 பேருடன் சென்று கோகுலகண்ணன் அவருடைய நண்பர் பிரதீப்ராஜ் ஆகியோரிடம் தகராறில் ஈடுப்பட்டனர்.

  பின்னர் அவர்கள் கோகுலகண்ணன் , பிரதீப்ராஜ் ஆகியோரை சரமாரியாக தாக்கி விட்டு பிரதீப்ராஜிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர். பின்பு கொலை மிரட்டல் விடுத்து சென்றுவிட்டனர்.

  காயம் அடைந்த கோகுல கண்ணன் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டுள்ளார். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த தாரமங்கலம் போலீசார் பாலமுருகன், ரகு ஆகியோரை கைது செய்துள்ளனர், தலைமறைவான முத்து, விஷ்வா, ராகவன் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

  Next Story
  ×