search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லிக்குப்பம் அருகே  விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரண உதவி
    X

    விபத்தில் பலியான குடும்பத்திற்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் நிவாரண தொகைக்கான காசோலை வழங்கி ஆறுதல் கூறினர். அருகில் கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா உள்ளனர்.

    நெல்லிக்குப்பம் அருகே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரண உதவி

    • கோர விபத்தில் 5 பேர் பலியாகியும், 91 பேர் காயமடைந்தனர்.
    • அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் வழங்கி ஆறுதல்

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் 2 பஸ் நேருக்கு நேர் மோதி நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகியும், 91 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் நேரில் பார்வை யிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய தோடு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.

    பின்னர் விபத்தில் இறந்த குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் நிவாரண உதவி அறிவித்ததை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய்க்காண காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்கள். கடலூர் மற்றும் புதுச்சேரி மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்து அனுமதிக்கப்பட்ட நபர்க ளை அமைச்சர்கள் எம். ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகர தி.மு.க செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாள ர்கள் சுப்பிரமணி, தன ஞ்ஜெயன், விஜய சுந்தரம், பகுதி செயலா ளர்கள் சலீம், நடராஜன் , மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழி ல்நுட்ப அணி ஒருங்கிணை ப்பாளர் கார்த்திக், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்த தாரர் ராஜசேகர், மாநகர துணை செயலாளர் சுந்தர மூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, கவுன்சிலர்கள் பார்வதி, சாய்த்துனிஷா சலீம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×