என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 கன்றுகுட்டிகளுடன் பசு.
பழனி அருகே 2 கன்றுகளை ஈன்ற பசு
- பழனி அருகே 2 கன்றுகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர்
- பழனியில் 2 கன்றுகளை ஈன்ற பசு
பழனி:
பழனியை அடுத்த பெத்தனநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சிவா. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வளர்த்து வரும் பசுமாடுகளில் ஒன்று கன்றுக்குட்டி ஈன்றுள்ளது. முதலில் ஒரு குட்டி பிறந்த நிலையில் அடுத்ததாக ஒரு குட்டி ஈன்றுள்ளது.
இவை ஆண், பெண் குட்டிகளாகும். இதுகுறித்து அரசு கால்நடை மருத்துவர் முருகன் கூறுகையில், கால்நடைகளில் நூற்றில் ஒரு மாடு, கன்று ஈனுவது நடக்கலாம். மாட்டுக்கு நல்ல ஊட்டம் இருக்கும் நிலையில், நல்ல கரு சேர்ந்திருப்பின் இதுபோல இரட்டை கரு உருவாகி இரண்டு கன்று போட வாய்ப்புள்ளது.
இது போன்று குட்டி போடும் போது ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவுமே அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார். கன்று ஈன்ற பசுமாட்டை அந்த ஊரைச்சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர்.
Next Story






