என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
  X

  கைது  செய்யப்பட்ட வாஹித் மற்றும் ருத்திஷ் ஆகியோரை படத்தில் காணலாம்.

  தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்ற பேரை சுற்றி வளைத்து விசாரணை செய்தனர்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மலையம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பதாக தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) புவனேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக் டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்ற பேரை சுற்றி வளைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இனாயத்துல்லா என்பவரது மகன் வாஹித் (வயது 20) மற்றும் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது மகன் ருத்திஷ் (வயது 23) என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், ரூ.38 ஆயிரத்து 500 பணம் மற்றும் ஒரு கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் வாஹித் மற்றும் ருத்திஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதில் ருத்திஷ் என்பவர் மீது ஏற்கனவே கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வெடிமருந்து தொடர்பான வழக்கும், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய த்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக வும் வழக்குப்ப திவு செய்யப்பட்டு ள்ளது குறிப்பிடத்த க்கது.

  Next Story
  ×