என் மலர்
உள்ளூர் செய்திகள்

17 வயது சிறுமி கடத்தல்
- வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
- சிலம்பரசன் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பொம்மிடி கோட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது தந்தை கோவையில் கட்டிட வேலைக்கு சென்றுவிடுவார். இதன்காரணமாக சிறுமி தனது அத்தையின் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் உறவினர்கள் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோட்டமேடு கிராமத்திற்கு வந்து உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் தனது மகளை பொம்மிடி அருகே பொ.துரிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாசு மகன் சிலம்பரசன் (வயது21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.






