என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவி ஆணைகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
தேனி மாவட்டத்தில் 156 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.15.26 கோடி வங்கிக் கடன்
- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் மாதாந்திர முகாம் தேனியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
- முகாமில் 156 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.15.26 கோடி வங்கி கடன், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
தேனி:
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) கூட்டுறவுத்துறை, மத்திய கூட்டுறவு வங்கி, முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம் இணைந்து மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் மாதாந்திர முகாம் தேனியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா தெரிவித்ததாவது:-
பெண்களின் கூட்டு முயற்சியில் லாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் அப்பெண்களின் குடும்ப வருமானத்தையும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவும் வறுமையிலிருந்து விடுபடச் செய்வதற்காகவும் மகளிர் திட்டத்தின் மூலம் சுழல்நிதி கடன், பொருளாதார கடன், தொழிற்கடன், வங்கிக் கடன்கள் போன்ற பல்வேறு கடனுதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இக்கடனுதவிகளை பெண்கள் பயன்படுத்தி தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
முகாமில் 156 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.15.26 கோடி வங்கி கடன், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.
கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பயிற்சி பெற்ற 35 மாணவிகளுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.






