search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பாதுகாப்புக்கு 1500 போலீசார்
    X

    தீபாவளி பாதுகாப்புக்கு 1500 போலீசார்

    • சேலத்தில் நாளை முதல் தீவிர கண்காணிப்பு
    • மக்கள் கூடும் இடங்களில் டிரோன்கள் பறக்க விடப்படும்:

    சேலம்:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தம் புதிய ஆடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து உற்சகாமாக கொண்டாடுவது வழக்கம்.இதனால் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சேலம் கடை வீதி, புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக சேலம் கடை வீதி, 4 ரோடு, 5 ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட பல பகுதிகளில் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், பொதுமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் உதவி கமிஷனர்கள் நாகராஜன், உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சேலம் 4 ரோடு பகுதியில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது சிறிது தூரம் துணை கமிஷனர் மாடசாமி நடந்து சென்று சாலையோரம் உள்ள கடைகள் முன்பு மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனை முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாநகரில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதற்கு வந்த பொதுமக்களுக்கு எவ்வித சிரமம் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், போலீஸ் கமிஷனரின் உ த்தரவுப்படி இந்தாண்டு முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடைவீதி, 4 ரோடு, 5 ரோடு உள்பட 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீபாவளிக்கு புத்தாடை எடுக்க வரும் கூட்டத்தில் புகுந்து விடும் திருடர்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதவிர கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் 37 போலீசார் தங்களது உடையில் சிறிய கேமராவை பொருத்தி அதன்மூலம் திருடர்களை கண்காணிப்பார்கள். தீபாவளி பாதுகாப்பு பணியில் 1500 போலீசாரும், ஊர்க்காவல் படையினர் 150 பேரும் என மொத்தம் 1650 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இவர்களுடன் அந்தந்த பகுதி உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். எனவே தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி, நகை மற்றும் இதர பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே மக்கள் கூடும் இடங்களில் டிரோன்களை பறக்கவிட்டு கண்காணிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நாளை முதல் இந்த கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது.இதைத்தொடர்ந்து 5 ரோடு, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது சுற்றி திரிந்தால் பொது மக்கள் அருகில்உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் நாளை முதல் கண்காணிப்பு மற்றும் தீவிர ேராந்து பணியில் ஈடுபடவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×