என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15 பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீடுகள்
    X

    பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    15 பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீடுகள்

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
    • இலவச வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 628 மனுக்கள் வரப்பெற்றன.

    இதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஒன்றியங்களில் விரிவான பழங்குடியினர் மேம்பாடு திட்டம் 2022-23 அழிவின் விளிம்பிலுள்ள வீடற்ற மலைப்பகுதியில் வசிக்கும் 15 பழங்குடியினர் மக்களுக்கு ரூ.74.31 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    மேலும், தருமபுரி ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட சோலை க்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காந்தன் என்பவர் சத்துணவு மைய அமைப்பாளராக பணிபுரிந்து உடல் நலக்குறைவு காரணமாக பணியி ன்போது மரணமடை ந்ததை தொடர்ந்து, அவரது வாரிசுதாரரும் மனைவியுமான செல்விக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசிர் இக்பால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பெ.மணிமேகலை, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வீடுகள்) தண்டபாணி, மரியதாஸ் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×