என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 1400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூடைகள்.

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 1400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போடி மெட்டு பகுதியில் நுகர்பொருள் பாதுகாப்புத்துறையின் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்
    • கேரளாவுக்கு கடத்த முயன்ற 1400 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவின்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறையின் பறக்கும் படை அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான குழு கடந்த சில நாட்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1400 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    போடி மெட்டு பஸ் நிறுத்தத்தில் கடந்த 8-ந்தேதி ஆய்வு மேற்கொண்டதில் அரசு பஸ்களில் இருந்து 450 கிலோ ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டு போடிநாயக்கனூர் கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

    லோயர் கேம்ப் அருகில் கடந்த 10-ந்தேதி இருசக்கர வாகனத்தில் கூடலூரில் வசிக்கும் நேரு என்பவர் 150 கிலோ ரேசன் அரிசியினை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றபோது கைப்பற்றப்பட்டது. மேலும், குமுளி செல்லும் வழியில் கோகிலாபுரம் கிராமத்தை சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தில் 150 கிலோ ரேசன் அரிசியினை கேரளாவுக்கு கொண்டு செல்லும்போது கைப்பற்றப்பட்டது.

    இதேபோல் குமுளி பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 650 கிலோ ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசி முழுவதும் உத்தமபாளையம் கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது

    Next Story
    ×