என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாய நிலத்தில் 13 அடி மலை பாம்பு மீட்பு
- பாலக்கோடு அருகே விவசாய நிலத்தில் 13 அடி மலை பாம்பு மீட்கப்பட்டது.
- காட்டுப்பன்றிகள் கிராமத்துக்குள் வருவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் (வயது 37). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அங்கு இன்று காலை சென்றார். அப்போது விவசாய நிலத்தில் சுமார் 13-அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தார்.
இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரது உத்தரவின் பேரில் விரைந்து வந்த பாலக்கோடு வனத்துறை யினர் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் பாது காப்பாக கொண்டு சென்று விட்டனர்.
அடிக்கடி உணவுத்தேடி கிராமங்களுக்குள் காட்டுப்பன்றிகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
Next Story






