என் மலர்
உள்ளூர் செய்திகள்
120-வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
- பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை:
பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தி.மு.க.சார்பில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாைத செலுத்தப்பட்டது.
இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி.விஜிலா சத்தியானந்த், தொழிலதிபர் ஜெய்சன், தி.மு.க. நிர்வாகி எஸ்.வி. சுரேஷ், கவுன்சிலர்கள் உலகநாதன், கிட்டு, ரவிந்தர், பவுல்ராஜ் மற்றும் மண்டல தலைவர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் உவரி ராஜன் கிருபா நிதி, நிர்வாகிகள் பெரிய பெருமாள், ஜெகநாதன் என்ற கணேசன், கல்லூர் வேலாயுதம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, சண்முக குமார், முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன் மற்றும் ஆவரைகுளம் பால்துரை, செல்வராஜ், சீனிமுகம்மது சேட், பாறையடி மணி, வக்கீல் அன்பு அங்கப்பன், கவுன்சிலர் சந்திரசேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் சார்பில் நெல்லைமாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்ேகாடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் கவுன்சிலர்கள் அம்பிகா, அனுராதா, நிர்வாகிகள் ராஜேஸ் முருகன், சொக்கலிங்க குமார், ராஜேந்திரன், டியூக் துரைராஜ், பரணி இசக்கி, குறிச்சி கிருஷ்ணன், காவேரி, அய்யப்பன் உள்ளிட்டோர்
பா.ஜ.க. சார்பில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாைத செலுத்தினார். அப்போது மாவட்ட துணைத்தலைவர் தமிழ்செல்வன், பொறுப்பாளர் நீல முரளி யாதவ், மாவட்ட செயலாளர் வெங்கடா சலபதி என்ற குட்டி, வர்த்தக பிரிவு கணேசன், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நெல்லை பரமசிவன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஆவின் அண்ணாசாமி, மணிமூர்த்தீஸ்வரம் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அவைத்தலைவர் மாடசாமி, துணைச்செயலாளர் செல்வக்குமார், பகுதி செயலாளர்கள் சரவணன், மணிகண்டன், வால்சேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டாக்டர் சிவந்தி ஆதித்தினார் நற்பணி மன்றம் சார்பில் சிவ சங்கர் தலைமையில் மாவட்ட துணைச் செய லாளர் செல்லத்துரை முன்னி லையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப்ட்டது. இதில் கணேஷ் பாபு, செல்வராஜ், மனோகர், கிருஷ்ணகுமார், சங்கரநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சமத்துவமக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் நட்சத்திர வெற்றி தலைமை யில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நிர்வாகிகள் சண்முக சுதாகர், நெல்லை யப்பன், துரைப் பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.