search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா 120 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்-    தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு
    X

    அகஸ்தியர்பட்டியில் தற்காலிகமாக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை சேரன்மகாதேவி சப் கலெக்டர் ரிசப் பார்வையிட்ட காட்சி.

    சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா 120 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்- தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு

    • நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் செரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • விழாவில தென்காசி, ஆலங்குளம், நெல்லை உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் சுமார் 10 நாட்களுக்கு முன்பாகவே கோவிலுக்கு வந்து குடில் அமைத்து தங்கி சாமி தரிசனம் செய்வர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் செரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

    அப்போது தென்காசி, ஆலங்குளம், நெல்லை உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் சுமார் 10 நாட்களுக்கு முன்பாகவே கோவிலுக்கு வந்து குடில் அமைத்து தங்கி சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் விழாவில் கலந்துகொள்ள அரசு தடைவிதித்த நிலையில், தற்போது வருகிற 28 -ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.

    இதையொட்டி அங்கு தற்போது பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து குடில் அமைத்து தங்கியுள்ளனர்.

    இவர்கள் வரும் 30 - ந் தேதி வரை இக்கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்து வருவார்கள்.

    இன்று முதல் முதல் 30 -ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு தனியார் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் அகஸ்தியர்பட்டியில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் இன்று முதல் கோவிலுக்கு செல்கின்றனர்.

    இதற்காக சுமார் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பக்தர்கள் ஆடுகள், கோழிகள், அடுப்புகள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்கின்றனர்.

    மேலும் தனியார் வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களில் வந்தவர்களை போலீசார் மடக்கி அரசு பஸ்களில் ஏற்றி அனுப்பினர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களையும் அரசு பஸ்களில் ஏற்றி அனுப்பினர்.

    Next Story
    ×