என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    10, 12-ம் வகுப்பு பொதுதேர்வில்இருமத்தூர் ஐ.வி.எல். பள்ளிமாணவர்கள் சாதனை
    X

    10, 12-ம் வகுப்பு பொதுதேர்வில்இருமத்தூர் ஐ.வி.எல். பள்ளிமாணவர்கள் சாதனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • 550-580-க்கு மேல் 55 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    மத்தூர்,

    தருமபுரி மாவட்டம், இருமத்தூர் ஐ.வி.எல்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 2022-23 ஆம் ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் சென்னகேசவன் என்ற மாணவன் 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், அறிவுக்கரசி என்ற மாணவி 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், மாணவர் பிரத்தீஷ் 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் பள்ளியில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 550-580-க்கு மேல் 55 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மேலும் பத்தாம் வகுப்பில் ரதிதேவி, பிரநீத் ஆகியோர் 500 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், பேரின்பன், ஹைக்ரிவா, பிரணவ் ஆகியோர் தலா 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், பிரசன்னா, கார்னிகா தலா 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    மேலும் பள்ளியில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 2 மாணவர்களும், 480-க்கு மேல் 29 மாணவர்களும், 450 க்கு மேல் 126 மாணவர்களும், 400-க்கு மேல் 130 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மேலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை படிக்க வைத்து 100 சதவீதம் தேர்ச்சி தொடர்ந்து பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது.

    தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கோவிந்தராஜ், பொருளாளர் விஜயலட்சுமி கோவிந்தராஜ், செயலாளர் ஜெயந்தி வெங்கடேசன், முதல்வர் சண்முகவேல், துணை முதல்வர் அசோக், ஒருங்கிணைப்பா ளர்கள் முனியப்பன், பெருமாள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×