search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
    X

     சங்காபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்

    சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

    • சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி மண்டல பூஜை நடந்து வந்தது.
    • இதனையடுத்து மண்டல பூஜை நிறைவு விழா 2 நாட்கள் நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை யொட்டி மண்டல பூஜை நடந்து வந்தது. இதனையடுத்து மண்டல பூஜை நிறைவு விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் நெல்லை முத்தையா சிவநெறி அருள்பணி மன்றத்தாரின் திருவாசகம் முற்றோடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெருங்குளம் செங்கோல் ஆதீனம் திருக்கைலாய பரம்பரை 103-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீசிவபிரகாச தேசிய சத்தியஞான பராமாச்சாரியார் பங்கேற்று அருளாசியுரை வழங்கினார்.

    2-ம் நாளில் விநாயகர் பூஜை, கோபூஜை, வருண பூஜை,வேதிகா அர்ச்சனை, 108 சங்கு பூஜை, 108 கலச பூஜை, வேத பாராயணம், கணபதி ஹோமம், சுதர்சன ஹோம்ம, லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், நவகிரக ஹோமம், 9 மணிக்கு பூரணகுதி, வஸ்திரா குதி, 9.45 மணிக்கு தேவிஸ்ரீ அழகம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அழகு விநாயகர், கன்னிமூல விநாயகர், தேவி அழகம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், தீபராதனை, தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

    மாலை 6 மணிக்கு சிறப்பு சந்தன காப்பு , அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரவு 8 மணிக்கு படைப்பு பூஜை, தீபாரதனை நடைபெற்றது.

    Next Story
    ×