என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிறுவாபுரி அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் சோமவார 108 சங்காபிஷேகம்
- இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது.
- சிறுவாபுரி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் இன்று மூன்றாவது வார கார்த்திகை சோமவாரம் மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்கு பின்னர் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று மதியம் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. இதன் பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு 108 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர், மூலவருக்கு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறுவாபுரி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் தக்கார் சித்ராதேவி தலைமையில் கோயிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.








