என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக-கேரள எல்லையில் மழைக்கு இடிந்த 100 ஆண்டு பழமையான கட்டிடம்
    X

    கோப்பு படம்

    தமிழக-கேரள எல்லையில் மழைக்கு இடிந்த 100 ஆண்டு பழமையான கட்டிடம்

    • திருவாங்கூர் ஆட்சி காலத்தில் கேரளா- தமிழக எல்லை யான போடி மெட்டில் கல், மண் ஆகியவற்றைக் கொண்டு கட்டிடம் கட்ட ப்பட்டது.
    • 100 ஆண்டுகளுக்கு மேலாக ராஜ முத்திரையுடன் கம்பீராக நின்ற பாரம்பரிய கட்டிடம் இடிந்து சேதம் அடைந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளாவில் ஆட்சி செய்த மன்னர்களில் திருவாங்கூர் அரசர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். அவர்கள் ஆட்சி காலத்தில் சுங்க கட்டணம் வசூலிக்க கேரளா- தமிழக எல்லை யான போடி மெட்டில் கல், மண் ஆகியவற்றைக் கொண்டு கட்டிடம் கட்ட ப்பட்டது. அதன்பின்னர் சுதந்திரம் அடைந்த பின் மொழி வாரியாக மாநி லங்கள் பிரிக்கப்பட்டபோது இந்த கட்டிடம் வணிகம் மற்றும் வருமா னவரித் துறையி னரின் சோதனை ச்சாவடி யாக மாறியது.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்த ப்பட்ட பிறகு சோதனை ச்சாவடி செயல் இழந்தது. மிகவும் பழமை வாய்ந்த புராதன கட்டிடம் என்பதால் இதனை பராமரிக்க திட்டம் தயாரிக்கப்பட்டு கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்ப ட்டது.

    இந்த நிைலயில் கடந்த வாரம் கேரளாவில் கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக 100 ஆண்டுகளுக்கு மேலாக ராஜ முத்திரையுடன் கம்பீராக நின்ற பாரம்பரிய கட்டிடம் இடிந்து சேதம் அைடந்தது. இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×