search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டனையை  சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்ததால்பண்ருட்டி முன்னாள் நகராட்சி ஆணையர் சிறையில் அடைப்பு
    X

    தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்ததால்பண்ருட்டி முன்னாள் நகராட்சி ஆணையர் சிறையில் அடைப்பு

    • மனோகரன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.
    • 2015-ம் ஆண்டு மனோகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி ஆணையராக கடந்த 2002-ம் ஆண்டு பணிபுரிந்த மனோகரன் பண்ருட்டி தனபால் தெருவை சேர்ந்த செந்தில்குமாரிடம் பண்ரு ட்டி நகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலை ப்பள்ளியில் மேல்தளம் அமைக்கும் பணியை முடிந்து அதற்குண்டான காசோலை வழங்குவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

    இவ்வழக்கை விசாரணை செய்த கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிபன்றம் கடந்த 2015-ம் ஆண்டு மனோகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து மனோகரன் 2015-ம் ஆண்டு சென்னைஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி மனோகரன் தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அளித்த தீர்ப்பு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 1 1/2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், ரூ.4, ஆயிரம் அபராதமும் விதிக்கபட்டது. இந்த தீர்ப்பின்படி கடலூர் ஊழல் தடுப்பு பிரிவினர் மனோகரளை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×