என் மலர்
வணிகம் & தங்கம் விலை

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்.. சென்செக்ஸ் - நிஃப்டி எவ்வளவு?
- நிஃப்டி புள்ளிகள் 0.01% சதவீதம் சரிவுடன் 22,550 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது.
- தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தைகளுக்கு நாளை விடுமுறையாகும்.
வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (பிப்ரவரி 25) பங்குச்சந்தை சற்று தட்டையாக தொடங்கியுள்ளது. காலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 290 புள்ளிகள் உயர்வுடன் 74,743 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி புள்ளிகள் 0.01% சதவீதம் சரிவுடன் 22,550 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. எல்என்டி, பவர் கிரிட் ஆகியவற்றின் பங்குகள் இதில் அடிவாங்கின.
ஆனால் சிறிது நேரத்தின் பின், நிஃப்டி புள்ளிகள் 0.24 சதவீதம் உயர்ந்து தற்போது 22,610 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மஹிந்திரா, பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை நிஃப்டி50 இல் லாபத்தைக் கண்டுள்ளன.
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தில் 5 நாட்கள் இயங்கும். இந்நிலையில் நாளை (பிப்ரவரி 26 - புதன்கிழமை) மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தைகளுக்கு நாளை விடுமுறையாகும்.






