search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.டி.எம். டியூக் 790 இந்திய வெளியீட்டு விவரம்
    X

    கே.டி.எம். டியூக் 790 இந்திய வெளியீட்டு விவரம்

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கே.டி.எம். நிறுவனத்தின் டியூக் 790 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #KTM #Duke790
    கே.டி.எம். நிறுவனம் தனது 790 டியூக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் விரைவில் வெளியிட தயாராகி வருகிறது. மோட்டார்பீம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கே.டி.எம். டியூக் 790 மாடல் இந்தியாவில் மார்ச் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  

    கே.டி.எம். டியூக் 790 அந்நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிள் மாடலாக இருக்கிறது. 790 டியூக் முன்னதாக 2017 ஆண்டில் நடைபெற்ற இ.ஐ.சி.எம்.ஏ. மோட்டார்சைக்கிள் விழாவில் தி ஸ்கல்பெல் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. 2019 கே.டி.எம். 790 டியூக் மாடலில் 799சிசி, LC8c பாரலெல்-ட்வின் என்ஜின் கொண்டுள்ளது.

    இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர் 85 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் க்ரோமியம்-மாலிடெனம் ஸ்டீல் அலாய் டிரஸ் ஃபிரேம் மூலம் மறைக்கப்பட்டுள்ளது. பைக்கின் முன்புறம் 43 எம்.எம். அப்சைடு-டவுன் WP ஃபோர்க், பின்புறம் ஒற்றை WP மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.


    2019 கே.டி.எம். டியூக் 790 மாடலில் 17-இன்ச் அலாய் வீல்கள், 120.70 R17 மற்றும் 180/55 R17 டயர்களை கொண்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்த வரை முன்புறம் 300 எம்.எம். டூயல் டிஸ்க் பிரேக், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. டிஸ்க் பிரேக்களுடன் போஷ் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    கே.டி.எம். டியூக் 790 மாடலில் டி.எஃப்.டி. இன்ஸ்டரூமென்ட் டிஸ்ப்ளே, எல்.இ.டி. ஹெட்லைட்களும் ஸ்போர்ட்ஸ், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் என நான்கு டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது. இத்துடன் கார்னெரிங் ஏ.பி.எஸ்., சூப்பர்மோட்டோ மோட், ரைடு-பை வையர், வீலி, டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    169 கிலோ எடை கொண்டுள்ள கே.டி.எம். டியூக் 790 மாடலில் 14-லிட்டர் ஃபியூயல் டேன்க் கொண்டுள்ளது. இந்தியாவில் சி.கே.டி. யூனிட் வடிவில் இறக்குமதி செய்யப்பட்டு பூனேவில் உள்ள சக்கன் தயாரிப்பு ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. #KTM #Duke790
    Next Story
    ×