என் மலர்

  செய்திகள்

  ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்
  X

  ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இத்தாலியில் நடைபெறும் இ.ஐ.சி.எம்.ஏ. மோட்டார்சைக்கிள் விழாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. #EICMA2018  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இத்தாலியில் நடைபெறும் இ.ஐ.சி.எம்.ஏ. மோட்டார்சைக்கிள் விழாவில் புதிய எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. 

  புதிய எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிள் வழக்கமான மாடலுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. ஸ்டான்டர்டு மாடல் ஆஃப்-ரோடிங் அம்சங்களை கொண்டிருக்கும் நிலையில், ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200டி மாடலில் டூரிங் வசதிகள் வழங்கப்படுகிறது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மாடலில் 17 இன்ச் சக்கரங்களை கொண்டிருக்கிறது. வழக்கமான மாடலில் 21 இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது.  ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ்., எல்.இ.டி. லைட்கள் மற்றும் ப்ளூடூத், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதிகள் நிறைந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

  புதிய எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளில் 198சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர் @8000 ஆர்.பி.எம். மற்றும் 17.1 என்.எம். டார்கியூ @6500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

  இந்தியாவில் எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளை ஹீரோ மோட்டோகார்ப் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என்றும் இதன் விலை ரூ.1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. #EICMA2018 #motorcycle
  Next Story
  ×