search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுசுகி வி ஸ்டாம் 650 முன்பதிவு துவங்கியது
    X

    சுசுகி வி ஸ்டாம் 650 முன்பதிவு துவங்கியது

    இந்தியாவில் சுசுகி நிறுவனத்தின் வி ஸ்டாம் 650 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு துவங்கப்பட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Suzuki



    சுசுகி நிறுவனத்தின் புதிய வி ஸ்டாம் 650 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய வி ஸ்டாம் 650 வெளியீடு அடுத்த மாதம் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சுசுகி விற்பனை மையங்களில் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு கட்டணமாக ரூ.50,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய சுசுகி வி ஸ்டாம் 650 விலை ரூ.7.0 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் சுசுகி வி-ஸ்டாம் 650 XT மாடல் கவாசகி வெர்சிஸ் 650 மற்றும் பென்லி TNT 600 GT உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டதால் சுசுகி GSX-S750 விலை வெகுவாக குறைக்க முடிந்தது. இதே வழிமுறையை சுசுகி தனது 650 XT மாடலுக்கும் பின்பற்ற இருக்கிறது. ஹயபூசா மற்றும் GSX-S750 மாடல்களைத் தொடர்ந்து உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் மூன்றாவது மோட்டார்சைக்கிளாக சுசுகி வி-ஸ்டாம் 650 இருக்கிறது. 

    முதற்கட்டமாக இன்டர்மோட் 2016 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சுசுகி வி-ஸ்டாம் 650 XT இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகமானது. வி-ஸ்டாம் 650 மாடலின் முன்பக்கம் 19 இன்ச் மற்றும் பின்புறம் 17 இன்ச் ஸ்போக் வீல் கொண்டிருக்கிறது. 

    சுசுகி வி-ஸ்டாம் 650 XT மாடலில் 650சிசி வி-ட்வின் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே இன்ஜின் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் வி-ஸ்டாம் 650 XT மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலின் ஸ்டைலிங் பெரிய வி-ஸ்டாம் 1000 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. #SUZUKI #motorcycle
    Next Story
    ×