search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட்: இந்திய வெளியீடு மற்றும் முழு தகவல்கள்
    X

    டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட்: இந்திய வெளியீடு மற்றும் முழு தகவல்கள்

    இந்தியாவில் ஏற்கனவே இரண்டு மாடல்களை வெளியிட்ட டுகாட்டி நிறுவனம் தனது அடுத்த மாடலை வெளியிட தயாராகியுள்ளது. அந்த வகையில் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    மான்ஸ்டர் 797 ஸ்ட்ரீட்-ஃபைட்டர் மற்றும் மல்டிஸ்டிராடா 950 அட்வென்ச்சர் டூரர் மாடல்களை தொடர்ந்து புதிய மாடலை இந்தியாவில் வெளியிட தயாராகி வருகிறது. புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் செப்டம்பர் 22-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் ஸ்டான்டர்டு மற்றும் ஸ்போர்டியர் எஸ் என இரண்டு வித மாடல்களில் வெளியிடப்படுகிறது. புதிய டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் மாடலில் 937சிசி, L-ட்வின் டெஸ்டாஸ்ட்ரெட்டா இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 110PS, 9500 rpm மற்றும் 93NM பீக் டார்கியூ மற்றும் 6500 rpm செயல்திறன் கொண்டுள்ளது. 



    இத்துடன் சூப்பர் ஸ்போர்ட் மாடலில் ரைடு-பை-வையர், பவர் மோட்ஸ், 3-லெவல் போஷ் ABS யுனிட், 8 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையாக மாற்றக்கூடிய ஒலின்ஸ் சஸ்பென்ஷன் யுனிட், பின்புற கௌல் மற்றும் குவிக்ஷிஃப்டர் போன்ற வசதிகள் கொண்டுள்ள சூப்பர் ஸ்போர்ட் எஸ் மாடல் இந்தியாவில் கவாசகி நின்ஜா 1000 மற்றும் சுசுகி GSX-R1000F மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

    இந்தியாவில் டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் விலை ரூ.12 முதல் ரூ.13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பேனிகேல் 959 மாடலை விட புதிய சூப்பர்ஸ்போர்ட் விலை ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை குறைவு ஆகும். இந்தியாவில் சூப்பர்ஸ்போர்ட் மாடல் கவாசகி நின்ஜா மற்றும் சுசுகி GSX-S1000F மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
    Next Story
    ×