என் மலர்

  செய்திகள்

  டாமினருக்கு போட்டியாக விரைவில் வெளியாகும் மஹேந்திரா மோஜோ
  X

  டாமினருக்கு போட்டியாக விரைவில் வெளியாகும் மஹேந்திரா மோஜோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹேந்திராவின் மோஜோ ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளின் புதிய மாடல் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது.
  புதுடெல்லி:

  பிரீமியம் பாகங்கள் மற்றும் அம்சங்களுடன் இந்தியாவில் விற்பனையாகி வரும் மஹேந்திரா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் நேகெட் மோட்டார்சைக்கிள் மோஜோ, விலை குறைந்த மாடல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. 

  புதிய மஹேந்திரா மோஜோ UT300 என்ற பெயரில் விற்பனையாளரிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. ஒட்டுமொத்த வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், புதிய மோஜோ UT300 மாடலின் முன்பக்கம் கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது.

  மஹேந்திரா மோஜோ வழக்கமான மாடல்களில் ஃபியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்ட நிலையில், மோஜோ UT300 மாடலில் கார்புரேடெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்இடி டி.ஆர்.எல்., டூயல் எக்சாஸ்ட் மற்றும் பைரெலி டைப்லோ ரசோ II ரக டையர்கள் புதிய மாடலில் வழங்கப்படவில்லை. மாற்றாக புதிய மாடலில் MRF டையர்கள் வழங்கப்பட்டுள்ளது.  புதிய மோஜோ UT300 மாடலின் ஃபிரேம் மற்றும் முன்பக்க ஃபோர்க்களில் தங்க நிறம் வழங்கப்படாமல், ஸ்விங் ஆர்ம் மற்றும் சேசிஸ்-இல் பிளாக்டு அவுட் செய்யப்பட்டுள்ளது. மோஜோ UT300 மாடல் சிவப்பு மற்றும் நீலம் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது. மேலும் சீட் முழுமையாக மாற்றப்பட்டு பின்பக்க இருக்கை அதிக சவுகரியமாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

  தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் எண்ட் மோஜோ மாடல் மோஜோ XT300 என அழைக்கப்பட இருக்கிறது. இரண்டு புதிய மோஜோ மாடல்களிலும் 295 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 27 பி.ஹெச்.பி. மற்றும் 30 என்.எம். டார்கியூ கொண்டிருக்கிறது.

  ஏற்கனவே விற்பனையாளர்களுக்கு வழங்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், புதிய மோஜோ UT300 விலை ரூ.1.4 முதல் ரூ.1.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×